கணவரின் காதலியை புகழ்ந்த பிரபல நடிகரின் முன்னாள் மனைவி!
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் காதலி என கிசுகிசுக்கப்படும் சபா ஆசாத் என்பவரை அவரது முன்னாள் மனைவி சுசானே கான் புகழ்ந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை
பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும்,சூசன் கானை 2000-ல் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக நகர்ந்த ஹிருத்திக்கின் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி சூசன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அதன் பிறகு விவாகரத்து கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். ஹிருத்திக் ரோஷன் சமரசம் செய்தும் பலன் இல்லை. இதனால் இருவருக்கும் கோர்ட்டு 2014-ல் விவாகரத்து வழங்கியது. அப்போது குழந்தைகளை சூசன் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.
தற்போது ஹிருத்திக் ரோஷன் நடிகை சபா ஆசாத் உடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. இந்த ஜோடி கடந்த சில மாதங்களாக ஒன்றாக வெளியில் சென்று வரும் படங்கள் இணையத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளன.
ஹிருத்திக்கும் சபாவும் காதலிப்பதாக சில வாரங்களாக கிசுகிசுக்கப்படுகிறது. கடந்த மாதம் முதல் அவர்கள் ஒன்றாக சென்று வருவதை காண முடிகிறது. சபாவும், ஹிருத்திக்கின் குடும்பத்துடன் அவரது இல்லத்தில் உணவருந்தினார். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது வீட்டில் சமைத்த உணவையும் அனுப்பியிருந்தார்கள் ஹிருத்திக் குடும்பத்தினர்.
ஹிருத்திக் மற்றும் சபா விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஊகங்கள் நிலவி வரும் நிலையில், சபாவின் இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு ஹிருத்திக் ரோஷன் முன்னாள் மனைவி சூசன் கான் அளித்த பதில் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
நடிகையும் பாடகியுமான சபா ஆசாத் ஸ்க்ரீன் டெஸ்டில் எவ்வளவு காதல் கொண்டவர் என்பதற்கு ஆதாரமாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் டாம்பாய் உடையில் காணப்படுகிறார். அவரது காதலர் என கிசுகிசுக்கப்படும் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் அவரது முன்னாள் மனைவி சூசன் கான் ஆகியோர் அந்த வீடியோவை லைக் செய்து, சபாவின் திறமையை பாராட்டினர். கமெண்ட் பகுதியில் அவர்கள் இருவருக்கும் சபா பதில் அளித்துள்ளார்.
”நான் ஸ்கிரீன் டெஸ்டுகளை விரும்புகிறேன்!! லவ்!! மக்கள் ஏன் அவர்களை விரும்புவதில்லை என்பது எனக்குப் புரியவில்லை. எனது கைவினைக் கலையை கூர்மையாக வைத்திருப்பது எனக்கு மிகவும் விருப்பமாக உள்ளது . ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாத்திரத்தில் வாழ்ந்து, ஒவ்வொரு முறையும் முற்றிலும் மாறுபட்டதாக மாற்றுவதை விட சிறந்தது எது” என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் சபா.
அதற்கு பதிலளித்த ஹிருத்திக், “ஓ... ஹா நான் விரும்புகிறேன்" என்றார். அதற்கு சிரிப்பு எமோஜிகளுடன் "ஹே நான் சின்ன பையனைப் போல் இருக்கிறேன்" என்று பதிலளித்தார் சபா. ஹிருத்திக்கின் முன்னாள் மனைவி கான் அந்த வீடியோவில் "Soooo raddddddd. lovvve this!!!" என்று தெரிவிக்க, "நன்றி என் சூஸ்" என்று பதிலளித்தார் சபா.
Related Tags :
Next Story