காதலி, முன்னாள் மனைவி, அவரின் காதலருடன் கோவா பார்ட்டியில் பிரபல நடிகர்
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பார்ட்டியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் பலரையும் வியக்கவைத்து உள்ளது.
மும்பை
பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், சூசனும் 2000-ல் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக நகர்ந்த ஹிருத்திக்கின் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி சூசன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அதன் பிறகு விவாகரத்து கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். ஹிருத்திக் ரோஷன் சமரசம் செய்தும் பலன் இல்லை. இதனால் இருவருக்கும் கோர்ட்டு 2014-ல் விவாகரத்து வழங்கியது. அவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
ஹிருத்திக்கும், சூசனும் விவாகரத்திற்கு பிறகும் நட்பாக பழகி வருகிறார்கள். அவர்கள் மீண்டும் சேரப் போகிறார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை சபா ஆசாத்தை ரித்திக் காதலித்து வருகிறார்.
நடிகர் அர்ஸ்லான் கோனியை சூசன் கான் காதலிக்கிறார் சூசன் கான். சபாவை சூசன் பாராட்டுவதும், அர்ஸ்லானை ஹிருத்திக் பாராட்டுவதுமாக இருக்கிறது.
இந்நிலையில் ஹிருத்திக், சபா ஆசாத், சூசன் கான், அர்ஸ்லான் கோனி ஆகியோர் கோவாவில் ஒன்றாக பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு ஜோடிகளும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஆயிரம் தான் விவாகரத்து ஆகிவிட்டாலும் இவர்கள் இந்த அளவுக்கு நட்பாக இருப்பதை பார்க்க நம்ப முடியவில்லை. ஹிருத்திக்கை கடுப்பேற்ற அர்ஸ்லான் கோனியுடன் நெருக்கம் காட்டுகிறார் சூசன்.
அதை பார்த்து எரிச்சல் அடைந்த ரித்திக் தன் பங்கிற்கு சபாவுடன் நெருக்கமாக இருக்கிறார். இது உண்மையான காதலாக இருந்தால் சரி. இல்லை என்றால் சபாவும், அர்ஸ்லான் கோனியும் தான் பாவம் என்கிறார்கள்.
Related Tags :
Next Story