வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி பந்து வீச்சு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.
ஜமைக்கா,
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தான நிலையில் அடுத்த இரு ஆட்டங்களில் இந்திய அணி முறையே 105 ரன், 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4–வது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இருப்பினும் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.
Related Tags :
Next Story