மன்னிப்பு கேட்டார், அனுராக் தாகூர்

அனுராக் தாகூர் தனது செயலுக்கு விளக்கம் அளித்ததுடன் மன்னிப்பும் கேட்டு இருந்தார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த போது லோதா கமிட்டி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியதை மறைத்து தவறான தகவலை தெரிவித்ததால் அனுராக் தாகூர் அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து அனுராக் தாகூர் தனது செயலுக்கு விளக்கம் அளித்ததுடன் மன்னிப்பும் கேட்டு இருந்தார். இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு அவரை புதிதாக தெளிவான முறையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் படி அறிவுறுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து அனுராத் தாகூர் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கும் நோக்கம் எனக்கு ஒருபோதும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story