4-வது டெஸ்ட் 245 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து, இந்தியா விக்கெட் சரிவு


4-வது டெஸ்ட்  245 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து, இந்தியா விக்கெட் சரிவு
x
தினத்தந்தி 2 Sep 2018 11:29 AM GMT (Updated: 2 Sep 2018 11:29 AM GMT)

4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்கு 245 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 246 ரன்களில் சுருண்டது. பின்னர் ஆடிய இந்தியா, புஜாராவின் சதத்தின் (132 ரன், நாட்-அவுட்) உதவியுடன் முதல் இன்னிங்சில் 273 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

 இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, சரிவை சமாளித்து நேற்றை ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து 233 ரன்கள் முன்னிலை பெற்றது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அடுத்த இரண்டு விக்கெட்களை இழந்தது. 96.1 ஓவரில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 27 ரன்கள் பின்தங்கியிருந்ததால், இங்கிலாந்து 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சார்பில் முகமதுஷமி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
 
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடிவரும் இந்தியா 3 விக்கெட்களை தொடர்ச்சியாக இழந்துள்ளது. தவான், ராகுல் மற்றும் புஜாரா வரிசையாக வெளியேறினர். ஆண்டர்சன் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களை வெளியேற்றியுள்ளார். கோலியும் ரெகானேவும் பேட்டிங் செய்து விளையாடி வருகிறார்கள். இந்தியா 23 ரன்களுடன் விளையாடி வருகிறது.

Next Story