ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 16 April 2019 2:23 PM GMT (Updated: 16 April 2019 2:23 PM GMT)

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

மொகாலி, 

மொகாலியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகளுக்கு இடையேயான 32-வது லீக் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி தீவிரம் காட்டும்.

அதேநேரத்தில் வெற்றி பாதைக்கு திரும்ப பஞ்சாப் அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள்:-

ஆர்.அஸ்வின் (கேப்டன்), கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், டேவிட் மில்லர், மயங்க் அகர்வால், முகமது ஷமி.

ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள்:-

ரஹானே (கேப்டன்), ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால்.

Next Story