பெண்கள் உலக கோப்பை : இந்திய மகளிர் அணிக்கு 185 ரன்கள் இலக்கு


பெண்கள் உலக கோப்பை : இந்திய மகளிர் அணிக்கு 185 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 8 March 2020 8:47 AM GMT (Updated: 2020-03-08T14:17:21+05:30)

பெண்கள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு 185 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி.

மெல்போர்ன்,

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் ‘நாக்-அவுட்’ சுற்று முடிவில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில் மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று ஆஸ்திரிலியாவில் உள்ள மெல்போர்னில் 12.30 மணிக்கு தொடங்கியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.  

இந்திய அணி வெற்றிபெற 185 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலிய மகளிர் அணி நிர்ணயித்தது.  இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

Next Story