ஐபிஎல் கிரிக்கெட்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்கு


ஐபிஎல் கிரிக்கெட்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்கு
x
தினத்தந்தி 4 Oct 2020 11:51 AM GMT (Updated: 4 Oct 2020 11:51 AM GMT)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சார்ஜா, 

சார்ஜாவில் ஐபிஎல் கிரிக்கெட்டின் 17-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.  

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி மும்பை அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் டி காக் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் ரோகித் சர்மா 6(5) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 27(18) ரன்களில் கேட்ச் ஆனார். இதனிடையே அதிரடியாக ரன் சேர்த்துக்கொண்டிருந்த டி காக் தனது அரை சதத்தை பதிவு செய்தநிலையில், 67(39) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 28(19) ரன்களில் ஆட்டமிழந்தார்.  

கடைசியாக குர்ணால் பண்ட்யா 20(4) ரன்களும், பொல்லார்டு 25(13) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இறுதியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டி காக் 67 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரஷித் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story