முதல் ஒருநாள் போட்டி : ஆலோசனை கூறிய கோலி! ரிவ்யூ எடுத்த ரோகித்..


முதல் ஒருநாள் போட்டி :  ஆலோசனை கூறிய கோலி! ரிவ்யூ எடுத்த ரோகித்..
x
தினத்தந்தி 6 Feb 2022 12:34 PM GMT (Updated: 6 Feb 2022 12:35 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி கழற்றி விடப்பட்டார். இதையடுத்து, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஒரு வீரராக அணியில் தொடரும் விராட் கோலியின் செயல்பாடு எப்படி இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிர ஆலோசனை நடத்தினர். 

இதற்கு பதில் கிடைக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. முதலில் வெஸ்ட் இண்டீஸ் பேட் செய்தது. அப்போது 22 ஓவரில் சஹால் வீசிய பந்து வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்  ப்ரூக்ஸின் பேட்டில் பந்து உரசியதுபோல சென்று கீப்பரின் கையில் தஞ்சமடைந்தது. உடனடியாக இந்திய வீரர்கள் அப்பீல் செய்தனர். ஆனால், நடுவர் அதற்கு நாட்-அவுட் கொடுத்தார். 

ரிவ்யூ எடுக்குமாறு கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் சொல்லியிருந்தார் பவுலர் சாஹல். அப்போது கோலியும் ரிவ்யூவுக்கு செல்லும்படி ரோகித் ஷர்மாவிடம் சொல்லியிருந்தார். அதன்படி ரிவ்யூ எடுத்தார் ரோகித். டிவி அம்பயரின் ரிவ்யூவில் பந்து பேட்டில்  பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து அவுட் கொடுக்கப்பட்டது.  

கோலி ஒரு வீரராக விளையாடினாலும் உரிய நேரத்தில் அணிக்கு ஆலோசனை கூற தயங்கமாட்டார் என்பதை இந்த நிகழ்வு காட்டுவதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ மற்றும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 


Next Story