இலங்கைக்கு எதிரான டி20 ,டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!


இலங்கைக்கு எதிரான டி20 ,டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!
x
தினத்தந்தி 19 Feb 2022 12:52 PM GMT (Updated: 19 Feb 2022 11:29 PM GMT)

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி,2 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதுஇலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி,
,2 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.முதல் டி20 போட்டி வரும் பிப்ரவரி 24ல் தொடங்குகிறது .டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 4ல் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி  இன்று
அறிவிக்கப்பட்டுள்ளது 

இந்திய டி20 அணி :  

ரோகித் சர்மா (கேப்டன்) , ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் , வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், தீபக் ஹூடா, ஜடேஜா, .சஹல், பிஷ்னோய், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா , அவேஷ் கான்

இந்திய டெஸ்ட் அணி :

 ரோகித் சர்மா (கேப்டன்), பிரியங்க் பஞ்சால், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன்  கில், ரிஷாப் பண்ட் , கே.எஸ்.பரத், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், .அஷ்வின், குல்தீப் யாதவ், சௌரப் குமார். ,  சிராஜ், உமேஷ் யாதவ், முகமது. ஷமி, ஜஸ்பிரித் பும்ரா

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இருந்து இந்திய அணி வீரர்கள் அஜிங்கியா ரஹானே மற்றும்  புஜாரா நீக்கப்பட்டு உள்ளனர்.  இந்த தொடருக்கான துணை கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.  அவர் டி20 போட்டிக்கான துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 போட்டி தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று, டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டி ஆகிய இரண்டு போட்டி தொடர்களிலும் ஷர்துல் தாக்குருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது 


Next Story