பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் : வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி

123 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்க்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது
லாகூர்,
24 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் கடந்த மார்ச் 21ம் தேதி தொடங்கியது
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்சில் 10 விக்கெட்டுக்களை இழந்து 391 ரன்கள் குவித்தது .
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்க்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 2 வது நாள் ஆட்ட நேரமுடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது.
இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது .தொடக்கத்தில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது .ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது .
இதனால் பாகிஸ்தான் அணி 268 ரன்களுக்கு 10 விக்கெட்டுக்களை இழந்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அப்துல்லா ஷபீக் 81 ரன்களும் ,அசார் அலி 78 ரன்களும் ,கேப்டன் பாபர் அசாம் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டும் ,ஸ்டார்க் 4 விக்கெட்டும் வீழ்த்தினர் .
இதனை தொடர்ந்து 123 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்க்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது
Related Tags :
Next Story