3-வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது பாகிஸ்தான்
லாகூர்,
பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது .
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது
67 ரன்களில் 5 விக்கெட் இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி.அந்த அணியில் அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்ததார் .இறுதியில் 41.5 ஓவர்களில் 10 விக்கெட்டை இழந்து 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .
இதனை தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 37.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி சதமடித்தார் .அவர் 105 ரன்கள் ,இமாம் உல் ஹக் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்
இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி .
Related Tags :
Next Story