ஐ.பி.எல் : டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 2 April 2022 11:35 PM IST (Updated: 2 April 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்று வருகிற  10 -வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் -டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன


இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய குஜராத் அணியில்  தொடக்க வீரர் சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6  விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது .சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 46  பந்துகளில்  84  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

டெல்லி அணி சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் 

இதனை தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது 

இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது .குஜராத் அணியில் லாக்கி பெர்குசன் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

Next Story