15 பந்தில் 56 ரன் : ஆட்டத்தை பார்த்து அதிகம் ஆச்சரியப்பட்டது யார் ?-கம்மின்ஸ் ருசிகர பதில்


Image Courtesy : KKR Twitter
x
Image Courtesy : KKR Twitter
தினத்தந்தி 7 April 2022 10:01 AM IST (Updated: 7 April 2022 10:01 AM IST)
t-max-icont-min-icon

கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின

இந்த போட்டியில் கொல்கத்தா அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி வீரர் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் அவர் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் கேஎல் ராகுல் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இது குறித்தது கம்மின்ஸ் கூறுகையில் ;

இந்த  இன்னிங்ஸால் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் என்று  நினைக்கிறேன். இது போன்ற இன்னிங்ஸ்  என்னிடம் இருந்து வெளிவந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். .இந்த சீசனில் எனது முதல் ஆட்டத்தில் இதை செய்ததில் மிகவும் திருப்தியாக இருக்கிறது.  , கடந்த ஆண்டை விட நிறைய மாற்றங்கள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார் 

கம்மின்ஸ் அதிரடி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ;

அவர் (கம்மின்ஸ் ) இப்படி வந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை  அவர் விளையாடிய விதமே  பாராட்டுக்குரியது என தெரிவித்தார் 


Next Story