முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை அணி ? - பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்


Image Courtesy : Mumbai Indians / Punjab Kings Twitter
x
Image Courtesy : Mumbai Indians / Punjab Kings Twitter
தினத்தந்தி 13 April 2022 9:55 AM GMT (Updated: 13 April 2022 9:55 AM GMT)

5 முறை சாம்பியனான மும்பை அணி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. அனைத்து அணிகளும் 4 முதல் 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் , கொல்கத்தா , லக்னோ அணிகள் முன்னணி வகிக்கின்றன.

நடப்பு சாம்பியனான சென்னை அணி மற்றும் 5 முறை கோப்பை வென்ற மும்பை அணி இந்த சீசனில் முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தன.

இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. 5 முறை சாம்பியனான மும்பை அணி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இதை தொடர்ந்து இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் தீவிர முனைப்பில் மும்பை அணி களமிறங்குகிறது.

5-வது போட்டியில் இன்று விளையாடும் மும்பை அணி முதல் வெற்றி பெரும் கட்டாயத்தில் உள்ளது. அதே போல் விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வி என புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி 7-வது இடத்தில்  உள்ளது.

முதல் வெற்றியை பெற மும்பை அணியும் தோல்வியிலிருந்து மீள பஞ்சாப் அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Next Story