கவுண்டி கிரிக்கெட்: ஒரே அணியில் விளையாடும் புஜாரா, ரிஸ்வான்- இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகம்

இருநாட்டு வீரர்களும் ஒரே அணிக்காக விளையாடுவது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
லண்டன்,
இங்கிலாந்து நாட்டில் கவுன்டி கிரிக்கெட் மிகவும் பிரபலம்மான கிரிக்கெட் தொடராகும். இதில் உள்நாட்டு வீரர்களுடன் வெளிநாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் விளையாடுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 2014 முதலே கவுன்டி கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான புஜாரா விளையாடி வருகிறார். வெவ்வேறு அணிக்காக விளையாடி வந்த புஜாரா, இப்போது சசெக்ஸ் அணிக்காக இந்த சீசனில் விளையாடுகிறார்.
இதே அணிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வானும் நடப்பு சீசனில் விளையாடுகிறார். முதல் முறையாக கவுன்டி கிரிக்கெட்டில் அவர் விளையாடுகிறார்.
இந்த முறை இருநாட்டு வீரர்களும் ஒரே அணிக்காக கவுன்டி கிரிக்கெட் களத்தில் விளையாடுவது ரசிகர்களின் கவனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் சசெக்ஸ் அணியின் ஜெர்ஸியில் இணைந்து ஒன்றாக நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது.
இப்போது சசெக்ஸ் அணி டெர்பிஷையர் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. புஜாராவும், ரிஸ்வானும் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர். இந்த போட்டியில் தற்போது டெர்பிஷையர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
சசெக்ஸ் அணியின் பேட்டிங் செய்யும் போது புஜாரா மற்றும் ரிஸ்வான் களத்தில் ஒன்றாக விளையாட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
Related Tags :
Next Story