"என்னை பொறுத்த வரை அவர் தான் மிஸ்டர் ஐபிஎல்" - இந்திய வீரரை பாராட்டிய கிரேம் ஸ்வான்

தன்னை பொறுத்தவரை யார் மிஸ்டர் ஐபிஎல் என கிரேம் ஸ்வான் கூறி உள்ளார்.
மும்பை,
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்கான வீரர்கள் ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
அந்த ஏலத்தில் கடந்த வருடம் டெல்லி அணிக்காக அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். மேலும் பஞ்சாப் அணியின் கடைசி போட்டியில் மயங்க் அகர்வால் பங்கேற்காத நிலையில் தவான் அணியை வழிநடத்தினார்.
ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்களை குவித்த வீரர்களில் விராட் கோலிக்கு அடுத்து 2ம் இடத்தில் ஷிகர் தவான் (5989 ரன்கள் ) உள்ளார். ரோஹித் சர்மா, வார்னர், கெய்ல் போன்ற ஜாம்பவான் வீரர்களை விட அதிகமான ரன்களை குவித்து தவான் அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் தன்னை பொறுத்தவரை தவான் தான் மிஸ்டர் ஐபிஎல் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் கூறி உள்ளார்.
தவான் குறித்து அவர் கூறுகையில்," என்னை பொறுத்த வரை மிஸ்டர்.ஐபிஎல் என்றால் அது தவான் தான். இந்த சீசனிலும் அபாரமாக ஆடிவருகிறார். அவர் பேட்டிங் ஆடும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ஆவலுடன் பார்ப்பேன்.
ஷிகர் தவான் களத்திற்கு வந்ததும் எக்ஸ்ட்ரா கவர் திசையில் சிக்ஸர் அடிக்கிறார் என்றால், அவர் செம பார்மில் இருக்கிறார் எனஅர்த்தம். ஸ்கொயர், ஸ்டிரைட், லெக் திசை என அனைத்து திசைகளிலும் பலமானவர் தவான் " என அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story