ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கும் சச்சின் தெண்டுல்கர் மகன் ?


Image Courtesy : PTI
x
Image Courtesy : PTI
தினத்தந்தி 21 April 2022 8:19 AM GMT (Updated: 21 April 2022 8:19 AM GMT)

இன்று நடைபெறும் , போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதுகின்றன .

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் , போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதுகின்றன . 

முன்னாள் சாம்பியன் மும்பை அணி இந்த தொடரில் விளையாடிய 6 போட்டியில் , ஒரு போட்டியிலும்   வெற்றி பெறவில்ல்லை .மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் சென்னை  அணிக்கு எதிரான போட்டியில் சச்சின்  தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர்  களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மும்பை இந்தியன்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் அர்ஜூன் தெண்டுல்கர்  பந்துவீசி பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் அர்ஜூன் தெண்டுல்கர்  யார்க்கர் வீசி  அந்த அணியின் இஷான் கிஷானை கிளின் போல்ட் ஆக்குகிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சென்னைக்கு எதிரான போட்டியில் அர்ஜுன் தெண்டுல்கருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.மேலும் அவர் இந்த  ஆட்டத்தில் களமிறங்கலாம் எனவும் கூறப்படுகிறது 


Next Story