தோனியின் வியூகத்தில் சிக்கிய பொல்லார்ட் : 2010 இறுதி போட்டியை கண்முன் கொண்டுவந்த நிகழ்வு- வைரல் வீடியோ
பொல்லார்ட் விக்கெட்டை வீழ்த்த தோனி வகுத்த வியூகத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை,
2010 ஆம் நடந்த ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது.
169 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 114 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய பொலார்ட் அதிரடியாக விளையாட தொடங்கினார். இதனால் ஒரு கட்டத்தில் மும்பை அணி வெற்றி பாதை நோக்கி சென்றது.
அந்த நேரத்தில் பொலார்ட்டுக்கு வித்தியாசமான பீல்டிங்கை கேப்டன் தோனி அமைத்தார். லாங் ஆப் ஏற்கெனவே ஒரு பீல்டர் இருந்தபோதிலும் மிட் ஆப்-யில் மேத்யூ ஹேடனை நிறுத்தினார்.
சிஎஸ்கே வீரர் மோர்கல் வீசிய பந்தை பொலார்ட் தூக்கி அடிக்க சிக்ஸருக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹேடனிடம் கேட்சாக மாறியது. பொல்லார்ட்-க்காக தோனி அமைத்த இந்த வியூகம் அப்போது ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத நிகழ்வாக மாறியது.
What field set man , just too epic
— Sherlòck🫀 (@Valar_Dohaeeris) April 21, 2022
God Dhoni 🙏 pic.twitter.com/cif9bbsyu4
இதேபோல் நேற்று நடந்த போட்டியிலும் பொல்லார்ட்-க்காக தோனி வித்தியாசமான வியூகத்தை வகுத்தார். அதாவது நடுவருக்கு நேர் எதிராக சிவம் டுபே-வை தோனி நிறுத்தினார்.
தீக்சனா வீசிய பந்தை நேராக டுபே கையில் அடித்து பொல்லார்ட் வெளியேறினார். 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பொல்லார்ட், தோனி விரித்த வலையில் சிக்கி ஆட்டமிழந்த சம்பவம் சென்னை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story