"இப்போதும் அவர்களே சிறந்த பேட்ஸ்மேன்கள் "- கோலி , ரோகித் சர்மாவை ஆதரித்த பிரபல வீரர்..!!


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 24 April 2022 3:08 PM GMT (Updated: 24 April 2022 3:08 PM GMT)

கோலி, ரோகித் சர்மா குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணி 7 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை . அதற்கு அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங் முக்கிய காரணமாக உள்ளது.

இன்னொரு பக்கம் பெங்களூரு அணி நன்றாக விளையாடி வந்தாலும் அணியின் வீரர் விராட் கோலி கடந்த இரண்டு போட்டிகளிலும் முதல் பந்திலே அவுட்டாகி அதிர்ச்சி அளித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா ஆகிய இருவரும் தொடர்ந்து ரன்கள் குவிக்க திணறுவது ஐபிஎல்-யை கடந்து இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், " அவர்கள் இன்று சரியாக விளையாடாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் இருவரும் எவ்வளவு தீவிரமாக பயிற்சி செய்வார்கள் என்பதை மறந்துவிட கூடாது. அதனால் தான் அவர்கள் இப்போதும் தலை சிறந்த பேட்ஸ்மேன்களாக உள்ளனர். அதனால் அவர்களை நாம் ஆதரிப்போம்" என தெரிவித்துள்ளார்.

Next Story