ஐபிஎல் : விராட் கோலி,ரஜத் படிதார் அரைசதம் - பெங்களூரு அணி 170 ரன்கள் குவிப்பு


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 30 April 2022 5:26 PM IST (Updated: 30 April 2022 5:26 PM IST)
t-max-icont-min-icon

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் டூ பிளஸிஸ் தலைமையிலன பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்க் தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளஸ்சிஸ் ,விராட் கோலி களமிறங்கினர் .

  டு பிளஸ்சிஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் .பின்னர் ரஜத் படிதார் கோலியுடன் இணைந்து நிதானமாக  விளையாடினார் .

இருவரும் இணைந்து பந்துகளை சிக்ஸர் ,பவுண்டரிக்கு விரட்டினர் . விராட் கோலி 45 பந்துகளிலும் ,ரஜத் படிதார் 29  பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.

தொடர்ந்து விளையாடிய  ரஜத் படிதார் 52 ரன்களில் ஆட்டமிழந்தார் . தொடர்ந்து விராட் கோலி 58 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார் .

பின்னர்  கிளென் மேக்ஸ்வெல் மட்டும்  அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார் .அவர் 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது .இதனை தொடர்ந்து 171 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி விளையாடுகிறது 

Next Story