ஐபிஎல் : கே.எல். ராகுல் அதிரடி : லக்னோ அணி 195 ரன்கள் குவிப்பு


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 1 May 2022 11:56 AM GMT (Updated: 1 May 2022 12:06 PM GMT)

இன்று நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும்   45-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன்  கே எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் ,குயின்டன் டி காக் களமிறங்கினர் .இருவரும் தொடக்கம் முதல் அதிரடியாக ரன்களை சேர்த்தனர் .அணியின் ஸ்கோர் 41 ரன்னாக இருந்தபோது டி காக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார் .

பின்னர் வந்த தீபக் ஹூடா ராகுலுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார் .
ஒரு புறம் கே. எல்.ராகுல் ,மறுபுறம் ஹூடா என இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் .சிறப்பாக விளையாடிய ஹூடா 32 பந்துகளில் ,கே.எல் .ராகுல் 35 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர் தொடர்ந்து விளையாடிய ஹூடா 52 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார் .

பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு  விரட்டி அதிரடியாக விளையாடிய ராகுல் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .டெல்லி அணி கடைசி சில ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியது .

இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது .தொடர்ந்து 196 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடுகிறது 

Next Story