பேர்ஸ்டோ அரைசதம்: ராஜஸ்தானுக்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்


பேர்ஸ்டோ அரைசதம்: ராஜஸ்தானுக்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
x
தினத்தந்தி 7 May 2022 12:06 PM GMT (Updated: 7 May 2022 12:06 PM GMT)

பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஷிகர் தவனும் களமிறங்கினர். 

தவன் 12 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோ அரைசதம் கடந்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ராஜபக்சே 27 ரன்னிலும், கேப்டன் மயங்க் அகர்வால் 15 ரன்னிலும் வெளியேறினர். 

இறுதியில் ஜிதேஷ் சர்மா (38) அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் தரப்பில் சஹல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. 


Next Story