சட்டோகிராம் டெஸ்ட் : அதிக வெப்பத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாதியிலே வெளியேறிய நடுவர்


Image Courtesy : Twitter
x
Image Courtesy : Twitter
தினத்தந்தி 18 May 2022 2:21 PM GMT (Updated: 18 May 2022 2:21 PM GMT)

சட்டோகிராமில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் கெட்டில்பார்க் உடல்நல குறைவு ஏற்பட்டு வெளியேறியுள்ளார்.

சட்டோகிராம்: 

வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 397 ரன்னில் ஆல் அவுட்டானது. வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் முஷ்பிகுர் ரஹீம்-யின் அதிரடியால் 465 ரன்கள் குவித்தது. 

இன்று 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தங்கள் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேச அணியை விட இலங்கை அணி 29 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

இந்த நிலையில் இன்று நடந்த 4-வது நாள் ஆட்டத்தில் வங்காளதேச அணியின் 139 ஆவது ஓவரின் போது கள நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பார்க் உடல்நலக்குறைவு காரணமாக மைதானத்தை விட்டு பாதியிலே வெளியேறினார். 

சட்டோகிராமில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் கெட்டில்பார்க் உடல்நல குறைவு ஏற்பட்டு வெளியேறியுள்ளார். இதனால் போட்டி சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. பின்னர் தொலைக்காட்சி நடுவர் ஜோ வில்சன் கள நடுவராக செயல்பட்டார்.

Next Story