திருப்பதியில் கொள்ளையடிக்க முயற்சி பணம் இல்லாத ஆத்திரத்தில் வணிக வளாகத்துக்கு தீ வைப்பு ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்


திருப்பதியில் கொள்ளையடிக்க முயற்சி பணம் இல்லாத ஆத்திரத்தில் வணிக வளாகத்துக்கு தீ வைப்பு ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 1 Jan 2017 4:15 AM IST (Updated: 31 Dec 2016 6:23 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி பஸ் நிலையம் அருகில் தனியாருக்குச் சொந்தமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. அதில், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வணிக வளாகத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்குச் சென்று விட்டனர். அதிகாலை 2.30 மணியளவில் வணிக வளாகத்தில் திடீரெனப் புகை எழு

திருமலை,

திருப்பதி பஸ் நிலையம் அருகில் தனியாருக்குச் சொந்தமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. அதில், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வணிக வளாகத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்குச் சென்று விட்டனர். அதிகாலை 2.30 மணியளவில் வணிக வளாகத்தில் திடீரெனப் புகை எழுந்தது, வணிக வளாகத்தில் இருந்த அபாய எச்சரிக்கை மணியும் ஒலித்தது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி திருப்பதி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.

இந்தத் தீ விபத்து குறித்து திருப்பதி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வணிக வளாகத்தில் வெளியே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்தபோது, அதில் திருடர்கள் வணிக வளாகத்துக்குள் நுழைந்து, கொள்ளையடிக்க முயன்றனர். கொள்ளையடிப்பதற்காக பணப்பெட்டிகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர். பெட்டிகளில் பணம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் வணிக வளாகத்துக்குத் தீ வைத்து விட்டு தப்பி ஓடிய காட்சிகள் பதிவாகி உள்ளது. இதுகுறித்து திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் மூலமாக திருடர்களை பிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.


Next Story