சாலையோரம் நின்ற லாரி மீது பஸ் மோதல்: சென்னை அய்யப்ப பக்தர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி சபரிமலைக்கு சென்றபோது பரிதாபம்
கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது பஸ் மோதிய விபத்தில் சென்னை அய்யப்ப பக்தர்கள் 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி மீது பஸ் மோதல் சென்னை கோயம்பேடு பாடிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணகுமார், சிவா. இவர்கள் தலைமையில் சபரிமலை அய
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது பஸ் மோதிய விபத்தில் சென்னை அய்யப்ப பக்தர்கள் 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரி மீது பஸ் மோதல்சென்னை கோயம்பேடு பாடிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணகுமார், சிவா. இவர்கள் தலைமையில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக அப்பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 59 பேர் நேற்று முன்தினம் இரவு பாடிக்குப்பம் பவானியம்மன் கோவிலில் இருந்து ஒரு தனியார் பஸ்சில் சபரிமலை நோக்கி புறப்பட்டனர். பஸ்சை தூத்துக்குடியை சேர்ந்த மலையாண்டி (வயது 43) ஓட்டினார்.
பஸ் நள்ளிரவில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே இந்திலி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முன்பு சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு பழுதாகி சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அந்த பஸ் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
3 பேர் பலிஇந்த விபத்தில் சென்னை பாடிக்குப்பத்தை சேர்ந்த அய்யப்பன் (40), பில்லா என்கிற சுந்தரம் (45), சங்கர் (35) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், பஸ்சின் முன்பகுதி உருக்குலைந்து போனது.
இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த அய்யப்ப பக்தர்கள் 23 பேரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 16 பேர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீசார் விசாரணைஇதற்கிடையே, பலியான 3 பேரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும், இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.