ஐகோர்ட்டு உத்தரவுப்படி அக்ரம–சக்ரம திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி


ஐகோர்ட்டு உத்தரவுப்படி அக்ரம–சக்ரம திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி
x
தினத்தந்தி 1 Jan 2017 2:46 AM IST (Updated: 1 Jan 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவுப்படி ‘அக்ரம–சக்ரம‘ திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்து உள்ளார். சித்தராமையா ஆலோசனை பெங்களூருவில் உள்ள முதல்–மந்திரியின் அலுவலகத்தில் நேற்று ‘அக்ரம–சக்ரம‘ திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் முதல

பெங்களூரு,

ஐகோர்ட்டு உத்தரவுப்படி ‘அக்ரம–சக்ரம‘ திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.

சித்தராமையா ஆலோசனை

பெங்களூருவில் உள்ள முதல்–மந்திரியின் அலுவலகத்தில் நேற்று ‘அக்ரம–சக்ரம‘ திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மந்திரிகள் ரோ‌ஷன் பெய்க், கே.ஜே.ஜார்ஜ், ஈஸ்வர் கன்ட்ரே, பெங்களூரு மாநகராட்சி மேயர் பத்மாவதி, மாநகராட்சி கமி‌ஷனர் மஞ்சுநாத் பிரசாத் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ‘அக்ரம–சக்ரம‘ திட்டத்தை உடனடியாக அமல்படுத்த கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது குறித்து மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்–மந்திரி சித்தராமையா விரிவான ஆலோசனை நடத்தினார்.

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தாலும், ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாரர்கள் மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால், அது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அத்துடன் ‘அக்ரம–சக்ரம‘ திட்டத்தை விரைந்து செயல்படுத்த சட்டவிதிகளை வகுக்கவும், அந்த விதிமுறைகளில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–

‘அக்ரம–சக்ரம‘ திட்டம் அமல்

‘அக்ரம–சக்ரம‘ திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி ‘அக்ரம–சக்ரம‘ திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, 2013–ம் ஆண்டுக்கு பின்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும். இதற்காக அந்த கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு 4 மாதம் கால அவகாசம் வழங்கப்படும்.

இவ்வாறு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.


Next Story