செய்யாறு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன்பு விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது


செய்யாறு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன்பு விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
x
தினத்தந்தி 7 Jan 2017 10:15 PM GMT (Updated: 2017-01-07T21:45:21+05:30)

செய்யாறு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆர்.புருசோத்தமன் தலைமை தாங்கினா

செய்யாறு,

செய்யாறு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆர்.புருசோத்தமன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய, மாநில அரசு வேளாண் துறைக்கு என தனியாக பட்ஜெட் தயாரிக்க வேண்டும். தற்போதிய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 2 சதவீத நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை 35 சதவீதமாக உயர்த்திட வேண்டும். நிலத்தடி நீர் சேமிக்க ஆறு மற்றும் கால்வாய்களில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

இதில் வட்டார தலைவர்கள் எல்.ரகுபதி, சந்திரசேகர், தேவராயன், ஆறுமுகம், டி.முருகன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story