கஞ்சா வழக்கில் கைதானவருக்கு நெஞ்சுவலி: சிகிச்சையில் இருந்தவரை அழைத்து செல்ல போலீசாருக்கு எதிர்ப்பு


கஞ்சா வழக்கில் கைதானவருக்கு நெஞ்சுவலி: சிகிச்சையில் இருந்தவரை அழைத்து செல்ல போலீசாருக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 7 Jan 2017 10:15 PM GMT (Updated: 7 Jan 2017 8:49 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகேயுள்ள தெத்துப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளிமலை (வயது 50). இவர் கஞ்சா வைத்திருந்ததாக, கடந்த மாதம் கன்னிவாடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரை, கடந்த வாரம் மதுரைக்கு அழைத்து செல்ல

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகேயுள்ள தெத்துப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளிமலை (வயது 50). இவர் கஞ்சா வைத்திருந்ததாக, கடந்த மாதம் கன்னிவாடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரை, கடந்த வாரம் மதுரைக்கு அழைத்து செல்ல போலீசார் முயன்றனர். அப்போது திடீரென நெஞ்சுவலிப்பதாக வெள்ளிமலை கூறியுள்ளார். இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று அரசு மருத்துவமனையில் இருந்து, அவரை அழைத்து செல்ல கன்னிவாடி போலீசார் வந்தனர். இதற்கு வெள்ளிமலையின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், மருத்துவமனையில் முதல் மாடியில் உள்ள ஆண்கள் வார்டில் இருந்து வெள்ளிமலையை, கீழே போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவருடைய உறவினர்கள் தடுக்க முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குண்டுக்கட்டாக வெள்ளிமலையை தூக்கி, ஜீப்பில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story