கும்பகோணத்தில் நாளை தொடர் முழக்க போராட்டம்: கடலூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும் பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


கும்பகோணத்தில் நாளை தொடர் முழக்க போராட்டம்: கடலூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும் பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 8 Jan 2017 11:00 PM GMT (Updated: 8 Jan 2017 4:23 PM GMT)

கும்பகோணத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் தொடர் முழக்க போராட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு கூட்டம் கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயற்குழ

கடலூர்,

கும்பகோணத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் தொடர் முழக்க போராட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் டவுன்ஹாலில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் விஜயவர்மன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் முரளி, வினோத், பாரதி, ஜீவானந்தம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கோவிந்தசாமி, மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மலிங்கம், வக்கீல் அணி மாநில இணை செயலாளர் தமிழரசன், மாவட்ட தலைவர் பி.ஆர்.பி. வெங்கடேசன், மாநில மாணவர் சங்க செயலாளர் கோபிநாத், மாநில இளைஞரணி துணை செயலாளர் சந்திரசேகரன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் தனம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் மாணவர் சங்க துணை செயலாளர் ரத்தினவேலு, மாநில செயற்குழு உறுப்பினர்கள் போஸ் ராமச்சந்திரன், ரா.தட்சிணாமூர்த்தி, சந்திரகாசு, பசுமை தாயகம் அசோக்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் தடா.தட்சிணாமூர்த்தி, ராமலிங்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் வாட்டர் மணி, மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவழகன், சத்தியா, பால்ராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திரளாக கலந்து கொள்ள வேண்டும்

கூட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும், இறந்த விவசாயிகளுக்கு தலா ரூ.25 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பா.ம.க. சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. இதில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

ஆகவே இந்த போராட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் இருந்து திரளாக கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ் மாக் கடைகளை மூட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் ஆலோசனையின்பேரில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, வெற்றி கண்டதற்காக அவருக்கு பாராட்டு தெரிவிப்பது,

குடிநீர் தட்டுப்பாடு

கடலூர் நகராட்சியில் 45 வார்டுகளிலும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story