சேலத்தில் திருமணம் செய்ய மறுத்ததால் வி‌ஷம் குடித்த இளம்பெண் கூலித்தொழிலாளி மீது வழக்கு


சேலத்தில் திருமணம் செய்ய மறுத்ததால் வி‌ஷம் குடித்த இளம்பெண் கூலித்தொழிலாளி மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-08T22:09:22+05:30)

சேலம், ஜன.9– சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22), கூலித்தொழிலாளி. இவருடைய உறவினரான சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவருடைய மகளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். இதுபற்றி தெரியவந்ததும் மணிகண்டனின் பெற்றோர் அ

சேலம்,

சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22), கூலித்தொழிலாளி. இவருடைய உறவினரான சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவருடைய மகளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். இதுபற்றி தெரியவந்ததும் மணிகண்டனின் பெற்றோர் அந்த பெண்ணை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மணிகண்டனும் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண் வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதுதொடர்பாக சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story