மெரினாவில் மாரத்தான் ஓட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


மெரினாவில் மாரத்தான் ஓட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Jan 2017 10:30 PM GMT (Updated: 8 Jan 2017 9:55 PM GMT)

உலகளவில் மாரத்தான் ஓட்டத்தை ஊக்குவிக்கவும், சிறந்த மாரத்தான் ஓட்ட வீரர்களை பெருமைப்படுத்தவும் ‘விப்ரோ’ நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ‘சென்னை ரன்னர்ஸ்’ எனும் பெயரில் மாரத்தான் ஓட்டம் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டுக்கான ‘விப்ரோ’

சென்னை,

உலகளவில் மாரத்தான் ஓட்டத்தை ஊக்குவிக்கவும், சிறந்த மாரத்தான் ஓட்ட வீரர்களை பெருமைப்படுத்தவும் ‘விப்ரோ’ நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ‘சென்னை ரன்னர்ஸ்’ எனும் பெயரில் மாரத்தான் ஓட்டம் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டுக்கான ‘விப்ரோ’ மாரத்தான் ஓட்டம் சென்னை மெரினா நேப்பியர் பாலம் அருகே தொடங்கியது.

அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய முழு நேர மாரத்தான் ஓட்டத்தை (42.2 கி.மீ. தூரம்) ‘விப்ரோ’ நிறுவன அதிகாரி பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து 21.1 கி.மீ. மற்றும் 10 கி.மீ. தூரம் கொண்ட பகுதி நேர மாரத்தான் ஓட்டங்களை முறையே ‘விப்ரோ’ நிறுவன தலைமை மேலாளர் கே.பாண்டுரங்கா, இயக்குனர் தீபா பரத்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த மாரத்தான் ஓட்டத்தில் பல ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இதில் முழு நேர மாரத்தான் ஓட்டத்தில் கென்யா நாட்டு வீரர் ஐசாக் கெம்பாய் (ஆண்கள் பிரிவு), மும்பையை சேர்ந்த சிம்தா சர்மா (பெண்கள் பிரிவு) ஆகியோர் வெற்றி பெற்றனர். மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். 

Next Story