மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா காலணிகள் புதுக்கோட்டை வந்தன


மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா காலணிகள் புதுக்கோட்டை வந்தன
x
தினத்தந்தி 6 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-07T01:50:41+05:30)

தமிழக அரசின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை,

2016-17-ம் கல்வி ஆண்டியில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரியானா மாநிலத்தில் இருந்து சுமார் 22 ஆயிரத்து 810 ஜோடி விலையில்லா காலணிகள் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு லாரி மூலம் நேற்று வந்தன. இந்த காலணிகள் மாணவ-மாணவிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என்று தெரிகிறது. 

Next Story