கடலூர் சுங்கச்சாலையை நல்ல தரத்துடன் அமைக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
கடலூர் செம்மண்டலத்தில் இருந்து பட்டாம்பாக்கம் வரை அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாலையை நல்ல தரமான முறையில் அமைக்க வேண்டும்
கடலூர்,
ஆய்வு கூட்டம்
2015–16–ம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தில் கடலூர் செம்மண்டலம் முதல் பட்டாம்பாக்கம் வரை அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாலை பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் ராஜேஷ் பேசியதாவது:–
தரமான சாலைகடலூர் செம்மண்டலம் முதல் பட்டாம்பாக்கம் வரை 15.50 கிலோ மீட்டர் சாலை அமைக்கும் பணியில் மடுகரை அருகில் சாலையின் இடையில் அமைந்துள்ள மின்கம்பங்களை மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுங்கச்சாலையை நல்ல தரமான முறையில் அமைத்திட வேண்டும். பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஆனந்தராஜ், மின்சாரத்துறை கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், உதவி இயக்குனர்(நில அளவை), கடலூர் மற்றும் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.