மணல் விற்பனை குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை வகுக்கக்கோரி வழக்கு தமிழக அரசு பதிலளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு


மணல் விற்பனை குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை வகுக்கக்கோரி வழக்கு தமிழக அரசு பதிலளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 March 2017 4:00 AM IST (Updated: 28 Feb 2017 10:21 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.

மதுரை,

தமிழகத்தில் ஆற்று மணல் எடுப்பது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், மணல் இருப்பு வைப்பது, விற்பனை செய்வது குறித்து எவ்வித தெளிவான வழிகாட்டுதலும் இல்லை. இதனால் சட்டவிரோதமாக அதிகம் அளவில் மணல் எடுக்கப்பட்டு பக்கத்து மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது. இதனால் மணல் தேவைப்படும் பொதுமக்கள் நேரடியாக கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளது.

கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் ஆறுகளில் இருந்து மணல் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கட்டிடங்கள் கட்டுவதற்கான வரைபடத்தை சமர்பிக்கும்போதே அதற்கு தேவைப்படும் மணலை நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில் தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்கவும், மணலை விற்கும்போது முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் அவற்றை எடுத்துச்செல்வதற்கு வழங்கப்படும் உரிமங்களில் ஹாலோகிராம் முத்திரைகளை பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் மாதம் 21–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story