டெல்லியில் பிரதமர் மோடியுடன் பட்னாவிஸ் சந்திப்பு


டெல்லியில் பிரதமர் மோடியுடன் பட்னாவிஸ் சந்திப்பு
x
தினத்தந்தி 28 Feb 2017 9:30 PM GMT (Updated: 28 Feb 2017 11:35 PM GMT)

டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, மகேஷ் சர்மா மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று சந்தித்து பேசினார்.

மும்பை,

டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, மகேஷ் சர்மா மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று சந்தித்து பேசினார்.

பா.ஜனதா அமோக வெற்றி

மராட்டியத்தில் மாநகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

இதைத்தொடர்ந்து, மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, கலாசார மற்றும் சுற்றுலா மந்திரி மகேஷ் சர்மா மற்றும் சிவில் சப்ளை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:–

சத்ரபதி சிவாஜி கோட்டை

துவரம் பருப்பு கொள்முதல் செய்வதற்கான தேதியை ஒரு மாதத்துக்குள் நீட்டிப்பதாக மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஒப்புக்கொண்டார். அத்துடன், ராய்காட் கோட்டையை பாதுகாக்கும் பணியில் நாம் விரைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கோட்டை பராமரிப்பு பணக்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆகையால், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை பின்வரும் சந்ததிகள் அறிந்து கொள்ளும் வகையில், அவர் தொடர்புடைய அனைத்து கோட்டைகளும் பிரமாண்டமாக பராமரிக்கப்படும்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.


Next Story