புதுவை பொதுக்கணக்கு குழு கூட்டம் மத்திய தணிக்கை அதிகாரிகள் பங்கேற்பு


புதுவை பொதுக்கணக்கு குழு கூட்டம் மத்திய தணிக்கை அதிகாரிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 3 March 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டமன்ற பொதுக்கணக்கு குழு கூட்டத்தில் மத்திய தணிக்கை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

புதுச்சேரி,

பொதுக்கணக்கு குழு

புதுவை சட்டமன்ற பொதுக்கணக்குக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பொதுக்கணக்கு குழு தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், மத்திய தணிக்கைக்குழுவின் முதன்மை தணிக்கை அதிகாரி அல்கா, கணக்காய்வு துணைத்தலைவர் பெஞ்சமின் கருணாகரன், புதுவை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, நிதித்துறை செயலாளர் கந்தவேலு, போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், ஐ.ஜி. கண்ணன் ஜெகதீசன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன், புதுவை சட்டமன்ற செயலாளர் வின்சென்ட்ராயர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தணிக்கை அறிக்கை

இந்த கூட்டத்தில் கடந்த 2009-10-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்ட முதலீடுகள், இழப்புகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டம் இன்றும் (வெள்ளிக் கிழமை) தொடர்ந்து நடைபெற உள்ளது. 

Next Story