தமிழ் தேர்வு சரியாக எழுதாததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


தமிழ் தேர்வு சரியாக எழுதாததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-03T02:54:45+05:30)

தமிழ் தேர்வு சரியாக எழுதாததால், பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பாண்டியன் நகர் அவென்யூவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவருடைய மகன் சந்தோஷ் குமார் (வயது 18). இவர் கிளாம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், தமிழ் முதல் தாள் தேர்வுக்கு சென்று தேர்வு எழுதினார். தேர்வு சரியாக எழுதாததால் வீட்டுக்கு வந்த சந்தோஷ் குமார், சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதற்கிடையே, நேற்று மாலை தனது அறையில் இருந்த சந்தோஷ்குமார் நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அறைக்கதவை திறந்து பார்த்த போது சந்தோஷ் குமார் மின்விசிறிக் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று தூக்கில் தொங்கிய சந்தோஷ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வு சரியாக எழுதாததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர் மற்றும் அவருடைய நண்பர்கள் மத்தியில் பெரும் துக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story