நாமக்கல்லில் தண்ணீர் தொட்டி புதிதாக கட்ட வலியுறுத்தி நாமக்கல் செய்தி–02 (டிசி)பொதுமக்கள் சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு


நாமக்கல்லில் தண்ணீர் தொட்டி புதிதாக கட்ட வலியுறுத்தி நாமக்கல் செய்தி–02 (டிசி)பொதுமக்கள் சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-10T19:52:40+05:30)

நாமக்கல் நகரில் தண்ணீர் வினியோகத்திற்கு புதிய தொட்டி கட்ட வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

சாலைமறியல் முயற்சி

நாமக்கல் நகராட்சியில் உள்ள 11–வது வார்டில் மசூதி தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள கிணறு அருகில் ஒரு குடிநீர் தொட்டி கட்டப்பட்டு இருந்தது. அதன்மூலம் கிணற்று தண்ணீர் அந்த பகுதி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அந்த தண்ணீர் தொட்டியின் கொள்ளளவை அதிகப்படுத்த அந்த தொட்டி இடிக்கப்பட்டது. அங்கு புதிதாக தொட்டி வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனால் அந்த பகுதியினர் உப்பு தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். ஆனால் அப்பகுதியில் உள்ள சில வணிக கடைகளுக்கு அந்த தண்ணீர் கிடைக்க இணைப்பு கொடுக்கப்பட்டதால் அவர்களுக்கு தண்ணீர் கிடைத்து வந்தது.

இந்த நிலையில் நேற்று சுமார் 30 பெண்கள் மற்றும் ஆண்கள் காலிக்குடங்களுடன் சேந்தமங்கலம் சாலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் சாலைமறியல் செய்ய முயற்சி செய்தனர்.

பேச்சுவார்த்தை

இதை அறிந்த நாமக்கல் நகராட்சி அலுவலர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தண்ணீர் தொட்டி அங்கு அமைக்கப்பட்டு அப்பகுதியினருக்கு தண்ணீர் வினியோகிக்க ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்ட முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நேற்று அங்கு சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.


Next Story