சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரே‌ஷன் கடைகள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் வீரபாண்டி ராஜா அறிக்கை


சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரே‌ஷன் கடைகள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் வீரபாண்டி ராஜா அறிக்கை
x
தினத்தந்தி 11 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-11T19:24:50+05:30)

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வீரபாண்டி ராஜா வெளியிட்டுள்ள

சேலம்,

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வீரபாண்டி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் நடக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் ரே‌ஷன் கடைகளில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உணவு பொருட்கள் கிடைப்பதில்லை என்ற அவலநிலை நிலவுகிறது. இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட தமிழகத்தில் அனைத்து ரே‌ஷன் கடைகள் முன்பாக தி.மு.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனைத்து ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்திற்கு உட்பட்ட சேலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, ஏற்காடு, வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களிலும், ஆத்தூர், நரசிங்கபுரம் ஆகிய நகரங்களிலும் மற்றும் பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ள ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அனைத்து நிர்வாகிகளும் முழுமையாக பங்கேற்க வேண்டும். மேலும், இது மக்களுக்கான போராட்டம் என்பதால் பொதுமக்களை அதிகளவில் தி.மு.க.வினர் அழைத்து வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story