தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 312 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 312 பேருக்கு பணி நியமன ஆணை  அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 11 March 2017 9:30 PM GMT (Updated: 2017-03-11T20:46:58+05:30)

தூத்துக்குடியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 312 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 312 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வுதிட்டம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. தூத்துக்குடி மாவட்டத்தில் படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

இளைஞர்களுக்கான அரசு திட்டங்கள் குறித்த அரங்குகள், வேலைவாய்ப்பு அட்டை புதுப்பிப்பு, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி பெறுதல் ஆகியன அரங்குகள் முகாமில் அமைக்கப்பட்டு இருந்தன.

பணி ஆணை

முகாமில் 68 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். இதில் 2 ஆயிரத்து 367 இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தனர். அவர்களில் 312 பேர் உடனடியாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். 435 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு 312 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி பேசினார்.

விழாவில் தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் இந்துபாலா, உதவி அலுவலர் சிவக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்லப்பாண்டியன், ஏ.பி.சி. மகளிர் கல்லூரி முதல்வர் வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story