வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.11 லட்சத்து 43 ஆயிரம் மோசடி பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு


வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.11 லட்சத்து 43 ஆயிரம் மோசடி பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-12T01:01:48+05:30)

மதுரை மேலூர், கீழவளவு பகுதியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி(வயது 38)

மதுரை,

மதுரை மேலூர், கீழவளவு பகுதியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி(வயது 38), உடன்பட்டி களஞ்சியம்(30), சின்னமலம்பட்டி ஆண்டிச்சாமி(23). இவர்களிடம் பை–பாஸ் ரோடு, பொன்மேனி பகுதியில் வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனத்தினர் பணம் வாங்கி இருந்தனர். வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஆண்டிச்சாமியிடம் ரூ.3.96 லட்சம், களஞ்சியத்திடம் ரூ.3.76 லட்சம், ஆண்டிச்சாமியிடம் ரூ.3.71 லட்சத்தை இந்த நிறுவனத்தினர் வாங்கியிருந்தனர். ஆனால் பணத்தை வாங்கி கொண்டு வெளிநாட்டு வேலைக்கு அவர்களை அனுப்பவில்லை. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், இந்த நிறுவனத்தை சேர்ந்த விஷ்ணுபிரியா, நரேஷ், பூமிநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story