கும்மிடிப்பூண்டியில் ரெயில் முன் பாய்ந்து இலங்கை அகதி தற்கொலை


கும்மிடிப்பூண்டியில் ரெயில் முன் பாய்ந்து இலங்கை அகதி தற்கொலை
x
தினத்தந்தி 12 March 2017 3:45 AM IST (Updated: 12 March 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் ரெயில் முன் பாய்ந்து இலங்கை அகதி தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி.இலங்கை தமிழர் அகதி முகாமில் வசித்து வருபவர் சுந்தரலிங்கம். இவரது மகன் இளையராஜா (வயது 28). பெயிண்டர். இவர் இலங்கையில் உள்ள வவுனியா மாவட்டம் கன்னாட்டி கிராமத்தை சேர்ந்தவர்.நேற்று முன்தினம் இரவு முகாமையொட்டி உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே சென்ற இளையராஜா, சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

போலீசார் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார், இலங்கை அகதி இளையராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளையராஜாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக சப்–இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story