ராஜாக்கமங்கலம்துறையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம் மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ராஜாக்கமங்கலம்துறையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜாக்கமங்கலம்,
ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மீனவர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் மீனவர் அமைப்பினர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு கண்களில் கருப்பு துணி கட்டி வந்து மனு கொடுத்தனர்.
மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
இந்தநிலையில், ராஜாக்கமங்கலம் துறையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யூ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்திற்கு ம.தி.மு.க. பிரமுகர் மரியஜான் தலைமை தாங்கினார். ஊர்தலைவர் ஆல்வின் விளக்கவுரையாற்றினார். போராட்டத்தில் வக்கீல் மரிய ஸ்டீபன், மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் என்.அந்தோணி, பொருளாளர் எஸ். அந்தோணி, மாவட்ட கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், மணக்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரது குடும்பத்தினருக்கு போதிய நிவாரணம் வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story