ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே உள்ள நந்தியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரவி (வயது 35). இவருக்கு மனைவியும் 2 மகளும் உள்ளனர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 25–ந்தேதி தன்னுடைய அலுவலகத்தில் இருந்த போது ரவி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை திருவெற்றியூர்– பொன்னேரி நெடுஞ்சாலை கொண்டகரை பகுதியில் மீஞ்சூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் டில்லிபாபு, கிருஷ்ணராஜ், செந்தில்குமார், செல்வராஜ் உள்பட போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
கைதுஅப்போது போலீசாரை பார்த்ததும் 2 பேரும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ரவி கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. அவர்கள் நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த டில்லிபாபு (38), நாகராஜ் (30) என்பது தெரியவந்தது. ரியல் எஸ்ட்ட் தொழில் சம்பந்தமான தகராறில் ரவியை அவர்கள் கொலை செய்ததாக தெரிவித்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்து பொன்னேரி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இந்த கொலை வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.