ஈரோடு காவிரி ஆற்றுப்பாலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு,
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் நேற்று போராட்டம் நடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆற்றுப்பாலத்தில் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாலத்திற்கு முன்பு காவிரி ரோட்டில் நின்றிருந்த போலீசார் அந்த வழியாக நடந்து வந்த இளைஞர்களையும், குழுவாக வந்தவர்களையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். ஆனால் மாலை வரை அந்த பகுதியில் யாரும் போராட்டம் நடத்த வரவில்லை.
Next Story