போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரி கைது


போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரி கைது
x
தினத்தந்தி 3 April 2017 4:00 AM IST (Updated: 3 April 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரி கைது

பழனிசெட்டிபட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 33). இவர் ஆண்டிப்பட்டியில் பழக்கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அந்தோணிராஜ் கையில் மண்எண்ணெய் கேனுடன் சென்றார். பின்னர் யாரும் எதிர்பார்க்காத போது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கும் ஆண்டிப்பட்டியில் உள்ள ராஜாராம் என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில், ராஜாராம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் அவர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.


Next Story