மேல்மருவத்தூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருட்டு


மேல்மருவத்தூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருட்டு
x
தினத்தந்தி 2 April 2017 10:30 PM GMT (Updated: 2017-04-03T01:13:43+05:30)

மேல்மருவத்தூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 8 பவுன் நகை திருடப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த கீழ்மருவத்தூரை சேர்ந்தவர் ஜீவா. இவரது மகள் தீபா (வயது 38). அரக்கோணத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ்பாபுவை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் தீபா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாய் வீடான கீழ்மருவத்தூருக்கு வந்தார்.

நேற்று காலை தீபா எழுந்து பார்த்தபோது அவர் அணிந்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை. வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

போலீசார் விசாரணை

நேற்று முன்தினம் இரவு வீட்டின் பூட்டை உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் தீபா அணிந்திருந்த 8 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர்.

இது குறித்து மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story