விழுப்புரம் பகுதி முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம்


விழுப்புரம் பகுதி முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம்
x
தினத்தந்தி 9 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-09T23:19:04+05:30)

விழுப்புரம் பகுதி முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பங்குனி உத்திர திருவிழா விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் ஏரிக்கரையில் பிரசித்திபெற்ற கதிர்வேல்முருகன் கோவில் உ

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் ஏரிக்கரையில் பிரசித்திபெற்ற கதிர்வேல்முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கதிர்வேல்முருகனுக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். ஒரு சில பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து வந்தனர்.

தீ மிதி

இதையடுத்து மாலை 6 மணியளவில் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, தீ குண்டத்தில் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளாள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் விழுப்புரம் மாம்பழபட்டு சாலையில் உள்ள இந்திரா நகர் பாலமுருகன், விழுப்புரம் திருச்சி சாலை முருகன் கோவில், ரெயில்வே மேம்பாலம் பாலமுருகன் கோவில், பூந்தோட்டம் முருகன், முத்தோப்பு பாலமுருகன் கோவில் உள்பட விழுப்புரம் பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.


Next Story