மகாவீர் ஜெயந்தியையொட்டி மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்


மகாவீர் ஜெயந்தியையொட்டி மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 9 April 2017 10:30 PM GMT (Updated: 9 April 2017 5:50 PM GMT)

மகாவீர் ஜெயந்தியையொட்டி மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூர் பகவான் 1,008 ஸ்ரீபார்சுவநாதர் கோவிலில் மகாவீர் ஜெயந்தியையொட்டி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் 6 மணிக்கு மூலவருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் பார்சுவநாதர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.

தேரோட்டம்

காலை 8.30 மணியளவில் மேளதாளம் முழங்க ஸ்ரீலட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்யா மகா சாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் நிலையை வந்தடைந்தது.

இதில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சென்னை உள்பட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின்போது செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story